வெள்ளி, 23 டிசம்பர், 2011

கோழைத்தனமான முடிவெடுக்கும் தமிழர்க இளைஞர்கள் !

நாட்டில் நடக்கும் அனேக அரசுக்கெதிரான போராட்டங்கள் மற்றும் தனிப்பட்ட நிகழ்வுகலகட்டும் இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர் இதில் சிலர் கப்பற்றபடுகின்றனர் பலர் இறக்கின்றனர் வாழ்க்கை பயணத்தில் எதிர்நீச்சல் போடவேண்டிய வயதில் அசாரதனமாக தீக்குளிப்பு தற்கொலை செய்துகொள்வது மிகவும் வருத்தமளிக்ககூடிய நிகழ்வாகும் இதில் படித்தவர், படிக்காதவர் என்ற பேதமில்லாமல் இருபாலரும் இத்தவறினை செய்கின்றனர் இதை பயன்படுத்தி சில அரசியல்வாதிகள் அரசியல் செய்கின்றனர் இப்படி இறப்பவர்களை வீரமரணம் என்கிற அடைமொழியோடு அழைக்கின்றனர் அவர்களை பொறுத்தவரை   ஒருசில நாட்களுக்கு அரசியல் பேசுவதற்கு ஒரு செய்தி, தினசரி நாளேடுகளுக்கு தலைப்பு செய்தி, செய்தி ஊடங்களுக்கு அது ஒரு முக்கிய செய்தி அவ்வளவுதான் அனால் உங்களுடைய பெற்றோர், நண்பர்கள், உடன்பிறந்தவர்கள் இவர்களுடைய மனநிலையை  சற்று எண்ணிப்பாருங்கள்
இதுவரை நடந்த இம்மாதிரியான நிகழ்வுகளால் உங்களால் சாதிக்க முடிந்தது என்ன ஒன்றும் இருக்காது.இளைஞர், இலக்நிகளே நம் நாட்டை பொறுத்தவரை  உங்களை போட்ர சாதாரண மனிதர்களின் உயருக்கு  மதிப்பு கிடையது உங்களுடைய இறப்பு தெருவில் அடிப்பட்டு இறக்கும் நாயின் சாவைப்போன்றது
சிந்தியுங்கள் நீங்கள் ஒருவரல்ல ஆயிரம், பத்தாயிரம் பேர் தீக்குளித்தலும் ஒன்றும் ஆகிவிட போவத்தில்லை மாற்றம் கொண்டு வருவதற்கு நீங்கள் உயிரோடு இருக்கவேண்டும் மாற்றங்கள் நிகழவேண்டும் என உளமார நீங்கள் எண்ணினால் இனிமேல் யாரும் இத்தவறினை செய்யாதீர்
வலைப்பின்னல் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் இனி யார் தீக்குளித்தாலும் அதை வீர மரணமாக சித்தரிக்கவேண்டாம்  நன்றி
   

திங்கள், 19 டிசம்பர், 2011

கொள்ளை போகும் தமிழக வளங்கள்

முல்லை பெரியாறு விழயத்தில் தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் இடையே பதற்றமான சூழ்நிலையில் தமிழக பேருந்துகள் கேரளாவிற்கும் அதேபோல் கேரளா பேருந்துகள் தமிழகத்திலும் தடை செய்யப்பட்டுள்ளன இதனால் இரு மாநில மக்களும் மிகுந்த சிரமத்திருக்கு ஆளாகியுள்ளனர் ஆனால் சில மானங்கெட்ட இரு மாநில அரசியல்வாதிகளின் பினாமி பெயரில் நடக்கும் மணல் கொள்ளை தொழில் எவ்வித தடையும்மில்லாமல் தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில் கேரளாவிற்கு செல்கிறது அல்லது கடத்தபடுகிரது இங்கே வீர வசனம் சில கோழைகள் இந்த மணல் திருட்டை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏனோ தெரியவில்லை ஒருவேளை இந்த மணல் திருட்டை கண்டும்காணமல் இருக்கின்றனவோ என்ற எண்ணத்தோன்றுகிறது
இவர்களில் போராட்டம் உண்மையேலேயே மக்களுக்கானது என்றால் பேருந்து மீது கல்வீசும் மலையாள கடைகளை அடித்டுடைக்கும் இவர்கள் சில தமிழக அமைப்புகள் இந்த மணல் திருட்டை ஏன் கண்டுகொள்ளவில்லை சில அரசியல் வாதிகளின் பிழைப்பிற்காக பொதுமக்களை வெறியேற்றி வாழ்க்கை நடத்தும் அரசியல்வாதிகளை மக்கள் இனங்கட்டுகொள்ளவேண்டும் 

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

வணக்கம் என் அன்பான தமிழ் மக்களுக்கு

என்னுடைய பதிவு மிக விரைவில் 
என்னை பதிவிடுவதற்கு உதவிய தமிழ்மணத்திருக்கு நன்றிகள் பல